Tamil News No.❶ Tamil News
Tamil News No.❶ Tamil News

ஊழலை உருவாக்குவதே பா.ஜ.க-தான்!’ – அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்

ஊழலை உருவாக்குவதே பா.ஜ.க-தான் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.

சஞ்சய் தத்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் சஞ்சய் தத் இன்று புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வரும் ‘சக்தி’ என்ற செல்போன் செயலி மூலம் நாடு முழுவதும் இருக்கும் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் இணைந்து வருகின்றனர். தற்போது புதுச்சேரியில் தொடங்கப்படும் இந்தத் திட்டத்தின் மூலம் மாநிலத்தின் நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒருங்கிணைக்கப்படுவார்கள். வருகின்ற  20-ம் தேதி மாலை நடைபெறும் இந்தத் தொடக்க விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், முதல்வர் நாராயணசாமி ஆகியோர் கலந்துகொண்டு திட்டத்தை தொடக்கி வைக்க இருக்கின்றனர்.

காங்கிரஸ்

வடமாநிலத் தேர்தல் நேரங்களில் இந்தச் செயலி மூலம்தான் தொண்டர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவரின் உரை, முக்கிய திட்டங்கள், செயல்பாடு தொடர்பான விவரங்கள் அனைத்தும் இடம் பெற்றிருக்கும். துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அரசியலமைப்புச் சட்டத்தை மீறி செயல்பட்டு வருகிறார். ராஜ்நிவாஸ் பா.ஜ.க-வின் தலைமையகமாகச் செயல்படுகிறது. பொங்கல் பரிசுகளை மக்களுக்குத் தராமல் தடுத்துள்ளார். இங்கு பா.ஜ.க ஆட்சியில் இருந்தால் அவர் அப்படிச் செயல்பட்டிருப்பாரா என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. காங்கிரஸ் அரசுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் கிரண் பேடியின் எண்ணம். ஊழலை உருவாக்குவதே பா.ஜ.க-தான்.

Related posts