Tamil News No.❶ Tamil News
Tamil News No.❶ Tamil News

நெல் அறுவடை பணிகள் தீவிரம் – சிவகங்கை விவசாயிகள் மகிழ்ச்சி!

வறட்சியான மாவட்டத்தில் நெல் அறுவடை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகள் ஓரளவிற்கு மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

TamilKalakkal.com

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், சாக்கோட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த கீழவேதியங்குடி கிராமத்தில் பொதுப்பணித்துறை கண்மாய் உள்ளது. இக்கண்மாய்க்கு 180 ஏக்கர் பாசனப் பரப்பு உள்ளது. வடகிழக்கு பருவமழையில் நிரம்பிய சிறிதளவு தண்ணீரை நம்பி நெல் விவசாயம் செய்தனர். இதில் ஒரு குடும்பத்திற்கு 20 சென்ட் அளவுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்குத் தீர்மானித்து சுமார் 36 ஏக்கரில் நெல் விவசாயம் செய்தனர். இதில் கண்மாய் தண்ணீர் காலியானதால் நெல்லில் கதிர் பிடிக்கும் தருணத்தில் பயிர் கருகும் நிலை ஏற்பட்டது. இதனால் மணிக்கு ரூ.300 வாடகைக்குத் தண்ணீர் பாய்ச்சி பயிரை காப்பாற்றி உள்ளனர். அப்படிக் கஷ்டப்பட்டு வளர்த்த பயிர் அறுவடை  துவங்கி இருக்கிறது.
 
இதுகுறித்து அக்கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் கூறும் போது, “கண்மாய் தண்ணீரை நம்பி நெல் பயிரிட்டோம். கதிர் பிடிக்கும்  நேரத்தில் கண்மாயில் தண்ணீர் காலியானதால் பயிர்கள் கருகத் துவங்கியது. பின்னர் ஆழ்துளைக் கிணறுகள் வைத்துள்ளோரிடம் மணிக்கு ரூ. 300க்கு கொடுத்து வாடகைக்குத் தண்ணீர் பாய்ச்சிக் காப்பாற்றி இருக்கிறோம். அதில் பூச்சி தாக்குதல் காரணமாக விளைச்சலும் குறைந்துள்ளது. தற்போது அறுவடைக்கு மணிக்கு ரூ.1,500 வாடகைக்குக் கதிர் அறுத்துள்ளோம். அதில் 20 சென்ட் அளவுக்கு விளைய வைத்ததில் 6 மூட்டை நெல் கிடைத்துள்ளது. பம்பு செட்டுக்கு இலவச மின்சாரம் பெற்றுள்ளவர்கள் தண்ணீர் இல்லாத விவசாயிகளுக்குக் குறிப்பிட்ட சென்ட் விவசாயத்திற்குத் தண்ணீர் இலவசமாகக் கொடுக்க வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்றார்.

Related posts