Tamil News No.❶ Tamil News
Tamil News No.❶ Tamil News

பிரெக்ஸிட்டுக்குத் தயாராகும் இங்கிலாந்து!

பிரெக்ஸிட் விவகாரத்தில் இங்கிலாந்து பிரதமர் தெரேசா மே-வுக்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்தது. 

இங்கிலாந்து பிரதமர் தெரேசா மே

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறுவது குறித்து மக்களிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பெரும்பான்மையான மக்கள், அந்த முடிவுக்கு ஆதரவாகவே வாக்களித்தனர். இதையடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளில் பிரதமர் தெரேசா மே தலைமையிலான இங்கிலாந்து அரசு ஈடுபட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக பிரெக்ஸிட் மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரேசா மே தாக்கல் செய்தார். பிரெக்ஸிட் மசோதா மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மசோதாவை எதிர்த்து 432 பேரும் ஆதரவாக 202 பேரும் வாக்களித்தனர். இதனால், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு நெருக்கடி முற்றியது. ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்.பி-க்களே மசோதாவுக்கு எதிராக வாக்களித்ததால், பிரதமர் தெரேசா மே தலைமையிலான அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வலியுறுத்தியது. 

இங்கிலாந்து பிரதமர் தெரேசா மே

இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. தீர்மானம் மீதான விவாதம் பல மணி நேரம் நீடித்தது. முடிவில், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்து 306 பேரும் எதிராக 326 பேரும் வாக்களித்தனர். இதனால், தெரேசா மே அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியைத் தழுவியது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மே, “இங்கிலாந்து மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என 2 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் முடிவு செய்தனர். மக்களின் அந்த விருப்பத்தை நாம் நிறைவேற்ற வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்தார்.

Related posts